மொழி ஒரு பிரச்சனையில்லை; சுமூக உறவை மேற்கொள்ள விரும்புகிறேன் - சூரப்பா

ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (15:33 IST)
எனக்கு மொழி ஒரு பிரச்சனையில்லை என்றும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றும் அண்ணா பலகலைக்கழக புதிய துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

 
அண்ணா பலகலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்து உத்தரவிட்டார். சூரப்பா அடுத்த வாரம் பொறுப்பேற்க உள்ளார். 
 
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பா அண்ணா பலகைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்சியளித்த சூரப்பா கூறியதாவது:-
 
எனக்கு மொழி ஒரு பிரச்சனையில்லை. தமிழ் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அனைத்து தரப்பினருடன் சுமூக உறவை மேற்கொள்ள விரும்புகிறேன். எனது நியமனம் குறித்து அரசியல் விமர்சனம் செய்வது பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்