நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மூன்றாவது அணியாக களம் கண்டது மக்கள் நல கூட்டணி. இதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போட்டியிடாமல் விலகி விட்டார்.
இந்நிலையில் தான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தோற்றுப்போய் இருப்பேன் என வைகோ கூறியுள்ளார். கோவில்பட்டியில் சாதிக் கலவரத்தை தூண்டிவிட சதித் திட்டம் தீட்டினர். என்னால் வாக்காளர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று நினைத்தேன், அதனால் தேர்தலில் நிற்கவில்லை.
நான் கோவில்பட்டியில் போட்டியிட்டிருந்தாலும் என்னை தோற்கடித்திருப்பார்கள் என்றார் வைகோ. முன்னதாக சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியின் தோல்வி தான் எதிர்பார்த்தது தான் என குறிப்பிட்ட வைகோ, நான் தோல்வியை எதிர்பார்த்து அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தேன். தேமுதிக தலைவர் விஜயகாந்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டார் வைகோ.