மனைவியை வாடகைக்கு விட்டு ஆண்களுக்கு ஆசை காட்டி பணம், நகை திருடி உள்ளார் அவரின் கணவர்.
சென்னை காந்தி நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்ரவன் என்ற வாலிபர் ஐஏஎஸ் படித்து வருகிறார். இணையதளத்தில் எனது மனைவியுடன் உறவு கொள்ளலாம் என்ற விளம்பரத்தை பார்த்து சபலப்பட்டுப் உடனே போனைப் போட்டார் ஜெகதீஸ்வரன். மறு முனையில் பேசிய வெங்கடரமணன் என்பவர், எனது மனைவியுடன் தாராளமாக உறவு கொள்ளலாம். ஆனால் அவர் லாட்ஜுக்கோ, ஹோட்டலுக்கோ வர மாட்டார். எங்களது வீட்டுக்கும் நீங்க வரக் கூடாது. உங்க வீட்டுக்கு வரத் தயார். என்று கூறியுள்ளார். அதற்கு வெங்கட்ரமணன், கடந்த மாதம் 25ம் தேதி வீட்டுக்கு வாங்க என்று கூறியுள்ளார். அதன்படி மனைவி சிந்துஜாவுடன் வந்துள்ளார் வெங்கடரமணன்.
வீட்டுக்கு வந்ததும் எனக்குத் தலை வலிக்கிறது காபி வேண்டுமே என்று கேட்டுள்ளார் சிந்துஜா. அதற்கு வெங்கடரமணன், நீங்க ரெண்டு பேரும் அப்படியே ஜாலியாக போய் காபி சாப்பிட்டுட்டு வாங்க என்று கூறி வெளியே அனுப்பி உள்ளார். ஜெகதீஸ்வரனும் சிந்துஜாவை அழைத்துப் போயுள்ளார். வீட்டில் வெங்கடரமணன் மட்டும் இருந்துள்ளார். காபி சாப்பிட்டு விட்டு இருவரும் வீடு திரும்பினார். ஆசையுடன் ஜெகதீஸ்வரன் காத்திருந்தார். ஆனால் சிந்துஜா திடீரென எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஜெகதீஸ்வரன் பெரும் ஏமாற்றமடைந்தார். வெங்கடரமணனும், இன்னொரு நாள் வருகிறோம். இப்போது மருத்துவமனைக்குப் போகிறோம் என்று கூறி விட்டு காரில் ஏறி மனைவியுடன் போய் விட்டார்.
அதிருப்தியுடன் இருந்த ஜெகதீஸ்வரன் படுக்கை அறைக்குப் போய் படுக்கலாம் என்று போனார். அங்கு பீரோ கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைநத் அவர் உள்ளே போய்ப் பார்த்தபோது அங்கு வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 75 பவுன் நகை ஆகியவற்றைக் காணவில்லை. உடனே வெங்கடரமணனுக்குப் போனைப் போட்டார். ஆனால் அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதையடுத்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் நடந்ததைக் கூறியுள்ளார் ஜெகதீஸ்வரன். அவர்கள் அவரை திட்டி விட்டு, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெங்கடரமணன் சிக்கினார். வெங்கடரமணன் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி சிந்துஜா சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் ஹைதராபாத்தில் வேலை பார்த்தபோது காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல மனைவியுடன் வெங்கடரமணன், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த போது அவர் சிக்கினார். ஆனால் சிந்துஜா தலைமறைவாகி விட்டார். பல பகுதிகளில் இதுபோல இருவரும் மோசடி செய்து பணம், நகைகளைத் திருடியுள்ளனர். சிந்துஜா படித்து வருகிறாராம். அவரது படிப்புச் செலவுக்காகவே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக வெங்கடரமணன் கூறியுள்ளார்.