எண்ணெய் கசிவுகளை மனிதர்களால் மட்டுமே அகற்ற முடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சனி, 4 பிப்ரவரி 2017 (18:02 IST)
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதை மனிதர்களால் மட்டுமே அகற்ற முடியும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

 
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை கடலில் எண்ணெய் படலம் பரவியுள்ளது.
 
கடலில் உள்ள மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியது. இதுகுறித்து மத்திய அரசு மற்றும் தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனிதர்களை கொண்டு எண்ணெய் படலங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
 
இதில் ஈடுப்பட்டுள்ள மனிதர்களுக்கு தோல் வர வாய்ப்புள்ளது. இதை நுண்ணுயிர்கள் கொண்டு அகற்றலாம். மும்மை மற்றும் அமெரிக்காவில் இதற்கு இதுபோன்ற விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது இந்த முறை தான் பின்பற்றப்பட்டது.
 
ஆனால் 8 நாட்கள் ஆகியும் எந்த இயந்திரமும் இல்லாமல் மனிதர்களை கொண்டு அகற்றி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
 
கடற்கரையோர பகுதிகளில் உள்ள கசிவுகளை மனிதர்களால் மட்டுமே அகற்ற முடியும். மீன்களை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. கரையோர எண்ணெய் கசிவுகளை அகற்ற தமிழக அரசு, துறைமுகம் மற்றும் கடலோர காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது, என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்