10 நாளில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையில் இப்படி ஒரு பயிற்சி பள்ளியா?

Prasanth Karthick
செவ்வாய், 21 மே 2024 (12:08 IST)
பல இடங்களில் பரொட்டா மாஸ்டர் வேலைக்கு இருக்கும் கிராக்கியை வைத்து மதுரையில் தொடங்கப்பட்டுள்ள பரோட்டா பள்ளிதான் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக உள்ளது.



இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டி சென்றுக் கொண்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதேசமயம் பலரும் பட்டப்படிப்புகள், படிப்புக்கேற்ற வேலை என பெரிய அளவிலான வேலைகளையே தேடி செல்வதால் சில வேலைகளுக்கு ஆள் கிடைக்காத நிலையும் உள்ளது. அப்படியான ஒரு வேலைதான் பரோட்டா மாஸ்டர் வேலையும்.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரியாணியை விட பிரபலமான உணவு பரோட்டாதான். மதுரை மற்றும் தென் தமிழகத்தில் பரோட்டா பலருக்கு தினசரி உணவாகவே இருக்கிறது. ஆனால் அதேசமயம் பரோட்டா மாஸ்டர் வேலைக்கு ஏகப்பட்ட டிமாண்டும் உள்ளது. மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் கூட பரோட்டா மாஸ்டர் வேலைக்கு பலர் செல்கின்றனர். இந்நிலையில்தான் பரோட்டா மாஸ்டர் பயிற்சி அளிக்கும் பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார் மதுரையை சேர்ந்த முகமது காசிம்.

ALSO READ: ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

இங்கு தங்குமிடம், உணவுடன் 10 நாட்களுக்கு பரோட்டா தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. ஏதேதோ தொழில்களுக்கு ஐடிஐ உள்ளிட்ட பல பயிற்சி வகுப்பு மையங்கள் உள்ள நிலையில் முதல்முறையாக பரோட்டா செய்ய பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், எந்த தொழிலும் கேவலம் அல்ல. தேவையை பொறுத்து இதுபோன்ற தொழில்களை கற்றுக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்