காதலர் தினம் வருவதை முன்னிட்டு காதலர்கள் வழக்கம் போல தங்கள் காதலை வெளிப்படுத்தும் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதைப் போல தங்கள் காதலை வெளிப்படுத்த ஆள் கிடைக்காத ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை தங்களை சிங்கிள்ஸ் மற்றும் முரட்டு சிங்கிள்ஸ் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக காதலர் தின எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டு சென்னையில் உள்ள அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் தோசை ஒன்றை உருவாக்கியுள்ளது.