கொரோனா வைரஸ் என்றால் என்னவென்ற தெரியாத நிலையில் நிலவேம்பு கசாயம் ஒரு குழு உருட்டிக் கொண்டு இருக்க ஹோட்டல்காரர் ஒருவரோ வேற லெவலுக்கு சென்றுள்ளார். காரைக்குடியில் நியூ பிரசிடென்ட் என்ற ஹோட்டல் உரிமையாளர் ‘கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடவும்" என்று எழுதி வைத்து விளம்பரம் செய்துள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படம் வைரல் ஆக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் ‘நாங்கள் 65 வருடமா இந்த தொழில் நடத்தி வருகிறோம். சின்ன வெங்காயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மேலும் நல்லெண்ணெய்யும் உடலுக்கு நல்லது என்பதால் விழிப்புணர்வு வரும் விதமாக இந்த விளம்பரத்தை செய்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.