5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு: ஹோட்டல் அசோசியசன் அறிவிப்பு

திங்கள், 8 ஜூன் 2020 (19:37 IST)
ஹோட்டல்களில் இதுவரை பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிட அரசு அனுமதித்துள்ளது. மேலும் தனிமனித இடைவெளி, சானிடைசர் பயன்படுத்துதல், கிருமிநாசினி தெளித்தல் உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் ஓட்டல் நிர்வாகிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒருசிலர் சமூகவலைத்தளங்களில் ஓட்டல்கள் மூலம் தான் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதாக வதந்தியை கிளப்பி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஹோட்டல் அசோசியசன் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
இதன்படி உணவகங்கள் மூலம் கொரொனோ பரவி வருவதாக சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரப்புவோரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ப்படும் என சென்னை ஹோட்டல் அசோசியசன் பொது அறிவிப்பு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை அச்சங்கத்தின் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்