ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - முதலமைச்சர் எச்சரிக்கை!

சனி, 15 மே 2021 (12:32 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இருந்து வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது. 
 
குறிப்பாக உயிர் காக்கும்  ரெம்டெசிவிர் மறந்து சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதனை பதுக்கி  கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசு, ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றாலோ, ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினாலோ  குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்