ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது: நீதிபதிகள் கருத்து

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (08:21 IST)
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாகர்கோவிலை சேர்ந்த அமுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது மகள் தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்
 
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில் அமுதா ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி இருந்ததாகவும் அந்த விளையாட்டுக்கு அடிமையாக இருந்ததாகவும் இதனை அடுத்து அந்த விளையாட்டுக்காக ஒருவர் அமுதாவை அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆன்லைன் விளையாட்டுகளை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது என்று கருத்து தெரிவித்தனர். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்