ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை: நிபந்தனைகளோடு நீதிமன்றம் ஒப்புதல்

திங்கள், 19 செப்டம்பர் 2016 (17:10 IST)
உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளோடு ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

 
 
ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், பிரேத பரிசோதனையை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும் என்றும், ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், மனுவை மதியம் 2.15 மணிக்கு விசாரணை செய்வதாகவும் அதுவரை ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளோடு ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியது. அதற்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனையில் ஈடுபட வேண்டும் என்று கூறியது. அதோடு பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கவும் உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்