குமரியில் இடியுடன் கூடிய கன மழை: வீட்டுக்குள் முடங்கிய மக்கள்

சனி, 14 மே 2016 (19:23 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன், இடியுடன் கனமழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரத்தால் கடுமையான வெயிலால் மக்கள் வாடி வரும் நிலையில் இந்த கன மழை சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.


 
 
அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த முதல் நாளே குமரியில் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. இந்நிலையில் இலங்கை அருகே தென் மேற்கு கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
 
இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் சற்று அவதிக்கும் உள்ளாகி உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் இந்த மழை மிக தீவிரமாக பெய்வதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
இடி, மின்னல், காற்று, கன மழை பெய்வதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளிவராமல் வீட்டுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்