சென்னை அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. மழை: பொதுமக்கள் அவதி..!

Siva

வியாழன், 31 அக்டோபர் 2024 (09:49 IST)
நேற்று சென்னை அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும், தீபாவளி தினத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கிழக்கு திசை காற்று நேற்று வீசத் தொடங்கியதால், சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, அண்ணா நகரில் பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை, ஒரு மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவானது. 
 
கொளத்தூர், அமைந்தகரை, அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் 5 முதல் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கே.கே.நகர், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி, வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன. இதனால், தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 
 
மேலும் கனமழை காரணமாக ஜவுளிக்கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் கடைசி நேர தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக பட்டாசு விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்