பிற்பகல் 1 மணி வரை வெளுத்து கட்டப்போகும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

Mahendran
வியாழன், 7 நவம்பர் 2024 (11:32 IST)
பிற்பகல் 1 மணி வரை தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாவட்டங்கள் பின்வருவன. 
 
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் 
 
மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இன்று பல இடங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இந்த மழை இன்னும் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்