அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை! வானிலை எச்சரிக்கை..!

Mahendran

திங்கள், 3 ஜூன் 2024 (14:37 IST)
அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தென் தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக இன்று முதல் அதாவது ஜூன் 3 முதல் ஜூன் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அதேபோல அடுத்த இரண்டு மணி நேரத்தில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்