பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த மாணவர் லக்கி சௌத்ரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டாவில் தங்கி, நீட் தேர்விற்கு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென நேற்று அவர் சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவனின் அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது என்றும், இதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எந்த அறிகுறியும் தற்போதைக்கு கண்டறியப்படவில்லை," என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், லக்கியின் தாய்மாமா கோஷல் குமார் சௌத்ரி, "லக்கி தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை அல்ல," என்றும், இது திட்டமிட்ட சதி எனவும் லக்கி கொலைக்கு காரணம் ராகுல் என்ற வாலிபர்தான் என்று சந்தேகிப்பதாகவும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறினார்.