தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Siva
வியாழன், 30 மே 2024 (09:18 IST)
தமிழ்நாட்டில் வரும் 1ஆம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என்றும், 1ஆம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்றும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் ஆனால் இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலாக இருந்தாலும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.

அதுமட்டுமின்றி வங்க கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்த நிலையில் தற்போது புயல் கரையை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாக உள்ளதை அடுத்து தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்