சென்னையில் விடிய விடிய தொடர் கனமழை.. மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்

Siva
வியாழன், 4 ஜூலை 2024 (07:16 IST)
சென்னையின் பல பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்ததை அடுத்து சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை உள்பட சில மாவட்டங்களில் நேற்று இரவு மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் திடீரென சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.

சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவஸ்தையில் இருந்த நிலையில் விடிய விடிய கனமழை பெய்ததால் சாலையில் மழைநீர் தயங்கியதாகவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் உள்ள மழை நீரை அகற்றும் பணியில் இருப்பதாகவும் தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதாகவும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி வெள்ளம் போல் இருப்பதை அடுத்து அந்த நீரை அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்