புயல் எதிரொலி: இன்று இரவு 19 மாவட்டங்களுகு கனமழை எச்சரிக்கை..!

செவ்வாய், 9 மே 2023 (18:30 IST)
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதை அடுத்து நாளை புயலாக மாற இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று இரவு மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், தென்காசி, நெல்லை, குமரி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூரில் மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்