புயலுக்கு பின் வெப்பம் மிக அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

செவ்வாய், 9 மே 2023 (10:09 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை மறுநாள் முதல் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு இன்று காற்றழுத்த மண்டலமாக உருவாகி நாளை புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் கனமழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை புயல் மேற்குவங்க மற்றும் வங்காளதேசம் ஆகிய பகுதிகளில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நாளை புயல் கரையை கடந்ததும் நாளை மறுநாள் முதல் அதாவது மே 11ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மிக அதிகமாக வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்