வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: 13 மாவட்டங்களில் இன்று கனமழை..!

திங்கள், 8 மே 2023 (13:52 IST)
வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வும் மையம் உருவாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று நீலகிரி கோவை திருப்பூர் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தேனி  மதுரை சிவகங்கை விருதுநகர் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரைபையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதை அடுத்து கனமழைக்கு வாய்ப்பு என்றாலும் இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய சேதம் எதுவும் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்