கனமழையால் இடிந்து தரைமட்டமான பாலம்.. 6 பேர் பரிதாப பலி..!

Siva

ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (10:11 IST)
மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மிரிக் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர்.
 
இந்த துயரச் சம்பவத்தில், மிரிக் மற்றும் குர்சியோங் நகரங்களை இணைக்கும் முக்கிய பாலமான துடியா இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. மேலும், தேசிய நெடுஞ்சாலை 110-ஐ ஒட்டியுள்ள உசேன் கோலா உட்பட பல இடங்களில் நிலச்சரிவால் சாலைகள் மண் மற்றும் சேறு குவியல்களால் மூடப்பட்டுள்ளன.
 
இந்திய வானிலை ஆய்வுத் துறை டார்ஜிலிங் உள்ளிட்ட பல வடக்கு வங்க மாவட்டங்களுக்கு 'அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை' விடுத்திருந்தது. மேற்கு ஜார்கண்ட் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, திங்கட்கிழமை காலை வரை இமயமலை அடிவார பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
தெற்கு வங்காளத்தின் சில மாவட்டங்களில், குறிப்பாக முர்ஷிதாபாத், பிா்பூம் மற்றும் நடியா பகுதிகளில் திங்கள்கிழமை காலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் IMD தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்