அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: எந்தெந்த மாவட்டங்கள்?

வியாழன், 7 ஜனவரி 2021 (13:21 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் பெய்தது என்பதும் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து வந்ததால் பெய்த கனமழையின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரியிலும் தற்போது மழை பெய்து வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது 
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்