தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று இரவு மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தேனி ஆகிய பகுதிகளிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.