புதிய காற்றழுத்த தாழ்வால் சென்னைக்கு கனமழையா? வானிலை ஆய்வு மையம்

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (17:00 IST)
வங்கக்கடலில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்படவுள்ளதையடுத்து சென்னைக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
டிசம்பர் 5-ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு ஏற்படும் என்றும் அதனை அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த புயல் வட தமிழகம் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னைக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்