இன்று இரவு 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:35 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 20 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 20 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது 20 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்