அரசு பள்ளிகளில் சேர்ந்தால் இலவச செல்போன் வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் ஒருவரின் அதிரடி அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் அடுத்த கல்வி ஆண்டில் நேற்று முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது
தனியார் பள்ளிகளின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை குறைவாகவே இருந்து வருகிறது. இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அரசு பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால் அனைவருக்கும் செல்போன் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த செல்போனை அவர் தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
தலைமை ஆசிரியரின் இந்த அறிவிப்பை அடுத்து அந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் தலைமையாசிரியர் செல்போன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில் இந்த அரசு பள்ளியில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு நல்ல வசதிகள் உள்ளது என்றும் சிறப்பாக பாடம் கற்றுத் தருகின்றனர் என்றும் இணையதளம் வாயிலாகவும் பாடங்கள் கற்றுத் தரப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் செல்போன் வாங்க இயலாத பெற்றோர்களுக்கு தலைமையாசிரியரின் இந்த அறிவிப்பு பெரும் உதவியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர்