என்னது! இலவசம் வேண்டாமா...? சர்காரை புரட்டி எடுக்கும் அமைச்சர்!

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (16:30 IST)
நேற்றைய தினத்தில் வெளியான சர்கார் திரைப்படம் நல்ல மக்களிடம் ரசனையில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை  அமைச்சர் கடம்பூர் ராஜு நடிகர் விஜயை  கடுமையாக விமர்சித்ததுடன் அறிவுரையும் கூறினார்.சில காட்சிகளை நீக்க வேண்டுமெனெ எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்நிலையில் தற்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் சர்கார் படத்தைப் பற்றி கூறியுள்ளதாவது:
 
சர்கார் படத்தில் வரும் இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.அரசை குறைகூறும் காட்சிகள் படத்தில் வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
 
மக்களின் மனநிலை ஆளும் அரசுக்கு ஆதரவாகவே உள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்