இன்னும் அந்த சட்டம் இருக்கு! எச்.ராஜா எச்சரிப்பது யாரை தெரியுமா?

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (17:47 IST)
திராவிட நாடு, தனி நாடு போன்ற கோரிக்கைகள் தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. ஆனால் அண்ணாவே ஒருசில காரணங்களால் தனித்தமிழ்நாடு, திராவிட நாடு போன்ற கோரிக்கைகளை கைவிட்டுவிட்டார். இந்த நிலையில் தென்மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு உருவாக்கும் கோரிக்கைகள் சமீபகாலமாக வலுத்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு முதலில் ஆதரவு கொடுப்பது போல் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பின் திடீரென பின்வாங்கி, திராவிட நாடு கோரிக்கையை திமுக கேட்கவில்லை என்று கூறினார்

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியதாவது: அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு என்றவர்கள் பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்றவுடன் நாங்கள் தனிநாடு கேட்கவில்லை, அதிக அதிகாரம் தான் கேட்கிறோம் என்று பின்வாங்கியதை உலகறியும். இன்னமும் அந்தச் சட்டம் இருக்கிறது என்று சிலருக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது' என்று கூறியுள்ளார். எச்.ராஜா, திமுக செயல்தலைவரைத்தான் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது

ஆனால் எச்.ராஜாவின் இந்த டுவீட் குறித்து டுவிட்டர் பயனாளிகள் பலர் அவருடைய அட்மினை திட்டி கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். ராஜாவின் பெயரை கெடுப்பதற்கு என்றே இந்த அட்மின் இருக்கான் போன்ற பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருவதால் டுவிட்டரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்