இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது ஏன்? எச்.ராஜாவின் புதிய கண்டுபிடிப்பு

ஞாயிறு, 26 நவம்பர் 2017 (10:33 IST)
தமிழகம் அவ்வப்போது கனமழை, வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விஞ்ஞானிகள் இந்த இயற்கை சீற்றங்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலையே காரணம் என்று கூறுகின்றனர்.

ஆனால் பாஜக தேசிய கட்சி செயலாளர் இதுகுறித்து கூறியபோது, கோவில்களில் உள்ள பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும், தமிழக அரசு, கோயில்களை முறையாக பராமரிக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் இந்து மதத்தை அழிப்பதே திராவிட இயக்கத்தினரின் குறிக்கோளாக இருப்பதாக குற்றஞ்சாட்டிய எச்.ராஜா, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த 38,000 கோயில்களில் 10,000 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோவில்களில் பகவானை பட்டினி போடுவதால் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாக கூறப்பட்ட எச்.ராஜாவின் கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்