பராசக்தி இப்போது வெளியானால்? -ப.சிதம்பரத்திற்கு ஹெச்.ராஜா பதில்

சனி, 21 அக்டோபர் 2017 (11:38 IST)
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. 


 

 
தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்தது. மேலும், தணிக்கை குழுவினரை தாக்கி எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். 
 
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் “திரைத்துறையினருக்கு ஒரு செய்தி; சட்டம் வந்துகொண்டிருக்கிறது.  இனிமேல் நீங்கள் அரசின் திட்டங்களை பாராட்டி டாக்குமெண்டரி படங்கள் மட்டுமே எடுக்க முடியும்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், மெர்சலில் சில வசனங்களை நீக்க சொல்லி பாஜக கேட்கிறது. வசனங்களில் புரட்சி படைத்த பராசக்தி படம் தற்போது வெளியானால் என்னவாகும் என யோசித்து பாருங்கள் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், அதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள ஹெச்.ராஜா “ திரு.ப.சிதம்பரம் அவர்களே! இன்று பராசக்தி படம் வெளியானால் கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரம் ஆகக்கூடாது என்று  அரசை கேவிலிலிருந்து மக்கள் வெளியேற்றுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்