கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப்பிறவிகளை கண்டித்தார்களா? எச் .ராஜா ட்விட்!

சனி, 18 ஜூலை 2020 (13:31 IST)
கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா? என எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 
 
கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் போலீஸாரிடம் தாமாக முன்வந்து சரணடைந்தார். 
 
இது தொடர்பாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது, கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில், இந்து கடவுள் முருகனை பற்றி இழிவாக பேசியதற்கு எதிர்ப்பை தெரிவிக்க பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசியதாக கூறினார். 
 
பெரியாரை அவமதித்தற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திமுகவினர், அதிமுகவினர், திருமாவளவன், வைகோ, டிடிவி தினகரன், ராகுல் காந்தி ஆகியோர் இதில் அடக்கம். 
 
இந்நிலையில் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இவர்களில் யாராவது கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா? என புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், ஜெயகுமார், கனிமொழி, வைகோ, டிடிவி தினகரன் கண்டன்ம் தெரிவித்தன் தோகுப்பாக உள்ளது. 
 
எச் ராஜாவின் இந்த பதிவை ஆதரித்து பலர் கமெண்ட் செய்தும் வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்