அன்றைக்கு காங்கிரஸை கழட்டி விட்டீங்களே! – சரத்பவாருக்கு எச்.ராஜா கேள்வி!

சனி, 23 நவம்பர் 2019 (18:46 IST)
அஜித் பவார் பாஜகவுடன் இணைந்ததை சரத்பவார் விமர்சித்தது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் எச்.ராஜா.

மகாராஷ்டிரத்தில் சிவசேனா கூட்டணி அமையும் என தேசமே எதிர்பார்த்த நிலையில் பாஜக ஆட்சியில் அமர்ந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க தேசியவாத காங்கிரஸிலிருந்து வெளியேறிய அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

இதுகுறித்து தனது ஆதங்கங்களை வெளிப்படுத்திய சரத்பவார் “அஜித்பவார் இப்படி செய்தது தேசியவாத காங்கிரஸுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்” என கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அஜித்பவாரின் இந்த செய்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 1978ல் நடந்த அரசியல் சம்பவத்தை நினைவுப்படுத்தியுள்ளார். அன்று காங்கிரஸுடன் இருந்த சரத்பவார் தேர்தலில் வெற்றிபெற்றதும் 37 எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி ஜனதா தள் போன்ற அரசியல் அமைப்புகளோடு சேர்ந்து முதல்வரானார். அன்று அவர் செய்தது தவறில்லை என்றால் இப்போது அஜித் பவாரை எப்படி குற்றம் சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்