நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்ததாக ஒத்த செருப்பு எனும் படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இதுமாதிரி படம் முழுவதும் ஒருவரே நடித்து வெளியானப் படங்கள் உலக அளவில் மிகவும் குறைவு. இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் கே.பாக்யராஜ், இயக்குநர் ஷங்கர், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
1960களில் யாதீன் என்ற படத்தை சுனில் தத் எடுத்தார். அந்தப் படத்திலும் அவரை தவிர வேறு யாரும் நடித்திருக்க மாட்டார்கள். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதன் பிறகு இந்தியாவில் இரண்டாவது முறையாகவும், தென்னிந்தியாவில் முதன்முறையாகவும் பார்த்திபன் இம்முயற்சியை எடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் அவரே கதை, வசனம் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். இது உலகிலேயே முதன்முறையாகும். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து ஆஸ்கர் விருதுகளுக்காக அனுப்பப்பட்டு விருதை வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.