ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ஹெச்.ராஜா உள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் சென்னை செண்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள 6வது நடைமேடையில் குடிநீர் குழாய் நீர் சுகாதாரமற்ற நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்ரீராமை அழைத்து அந்த குடிநீரைக் குடிக்குமாறு கூறியுள்ளனர். அதை குடித்த ஸ்ரீராம் உடனே துப்பியுள்ளார். உடனே ஹெச்.ராஜா தலைமையிலான குழு கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்.