பாஜகவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு; கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

வியாழன், 28 செப்டம்பர் 2017 (16:17 IST)
கர்நாடக மாநிலத்தில் பாகஜவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


 

 
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்து இருந்தார். அவர் கூறியதாவது:-
 
காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கையால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சாதி ரீதியாகவும், வர்த்தக ரிதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். மாந்தரீக செயல்பாடுகளால் அப்பாவி குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுகின்றனர். இத்தகைய மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் போராட்டத்தில் சமூக செயற் பாட்டாளர்கள் தாக்கப்படுகின்றார்கள். 
 
இதை கண்டிக்க வேண்டிய ஊடகங்களும் மூடநம்பிக்கையை வளர்க்கும் ராசி பலனுக்கும், சனிப் பெயர்ச்சிக்கும், ஜோதிடத்துக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கின்றன. எனவே மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
 
இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. பாஜகவை சேர்ந்த  சட்டமேலவை தலைவர் ஈஸ்வரப்பா, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மத நம்பிக்கையில் தலையிட முயற்சி செய்கிறது. பொதுமக்களின் நம்பிக்கையில் தலையிட சித்தராமையாவுக்கு உரிமை இல்லை என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் பாஜக எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்