ஜிஎஸ்டி கார்ப்பரேட் நலனுக்காக கொண்டுவரப்பட்டது: ஜி.ராமகிருஷ்ணன்

திங்கள், 3 ஜூலை 2017 (14:55 IST)
ஜிஎஸ்டி சட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காகவே அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


 

 
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
 
கதிராமங்கலத்தில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது காட்டு மிராண்டித்தனமானது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறையினர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
ஜிஎஸ்டி சட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
 
ஜிஎஸ்டி வரியால் நாட்டு மக்கள் அனைவரும் பொருட்களின் விலை குறித்து பெரும் அச்சத்தில் உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்