இந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் கடையில் மட்டுமின்றி வசந்த் அன் கோ மற்றும் ஹாட்சிப்ஸ் கடைகளிலும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் கடையில் மட்டும் சுமார் ரூ. 40 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்திருந்ததால் இந்த சோதனை நடைபெறுவதாகவும், சென்னையில் மொத்தம் 6 இடங்களிலும் கோவையில் 2 இடங்களிலும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், கூறப்படுகிறது. சோதனை முடிந்த பின்னரே எந்த அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து தெரியவரும்