சென்னை சிட்டி சென்டரில் தீவிபத்து: அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்
திங்கள், 26 மார்ச் 2018 (12:58 IST)
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகமான சிட்டி சென்டரில் சற்றுமுன் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீவிபத்து காரணமாக இதன் உள்ளே இருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தீவிபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் தீயணணப்பு துறையினர், காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியிலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.