முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: டிஎஸ்பி ஆகும் டீக்கடைக்காரர் மகள்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:22 IST)
முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: டிஎஸ்பி ஆகும் டீக்கடைக்காரர் மகள்
முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் டிஎஸ்பியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வடவாளம் ஊராட்சி என்ற பகுதியில் டீக்கடைக்காரர் ஒருவரின் மகள் பவானியா என்பவர் சமீபத்தில் குரூப் 1 தேர்வில் எழுதினார்
 
இவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் தானாகவே முயற்சி செய்து நூலகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படித்ததாக கூறியுள்ளார். 
 
இவர் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். தற்போது அவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ள பவானியாவை அவரது குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்