வங்கியில் இருந்து பணம் எடுத்து தராத தாத்தாவை கொலை செய்த பேரன்!

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (08:54 IST)
கேவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தை எடுத்து தராத ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பேரன் தாத்தாவை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
73 வயதான பாத்திரசாமி ஒரு கட்டிட தொழிலாளி வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்திருந்தார். இவரது பேரன் சீனிவாசன்(37) தினமும் தனது தாத்தாவிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
 
ஆனால் தற்போது பணத்தை எடுத்துதர முடியாது என தாத்தா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேரன் சீனிவாசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாத்தாவை கொலை செய்ய திட்டமிட்டான். நேற்று இரவு பத்திரசாமி தூங்கிக்கொண்டிருக்கும் போது ஈவு இரக்கமின்றி தனது நண்பர்களுடன் சேர்ந்து தாத்தாவை கத்தியால் குத்தி உள்ளார்.
 
இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் தாத்தா. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது பத்திரசாமி இறந்து கிடந்துள்ளார். பொதுமக்கள் வந்ததும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் பொது மக்கள்.
 
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தப்பி ஓடிய சீனிவாசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்