ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: 12 ஆண்டுகளாக விரதத்தில் இருக்கும் பட்டதாரி

சனி, 28 மே 2016 (12:05 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற கோஷம் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் ஓங்கி ஒலித்தது. ஆனால் அது பாஜகவின் பெரும்பான்மையான வெற்றிக்கும் பின்னர் அடங்கி போனது.


 
 
ஆனாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என பட்டதாரி ஒருவர் 12 வருடங்களாக விரதம் இருந்து வருகிறார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஈச்சம்பட்டியில் பி.ஏ தமிழ் இலக்கியம் படித்த ராமசாமி என்பவர் தான் அவர்.
 
48 வயதான ராமசாமி தீவிர அதிமுக தொண்டர், இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என 12 ஆண்டுகள் விரதம் இருந்து வரும் ராமசாமி இது குறித்து கூறியபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என, 12 ஆண்டுகளாக விரதமிருந்து சிறப்பு பூஜை செய்து வருவதாகவும் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் 48 நாள் தொடர் விரதம் இருந்ததாகவும் கூறினார்.
 
மேலும், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி 17 முறை ஐயப்பன் கோவிலுக்கும், 17 முறை பழநி கோவிலுக்கும் சென்று வழிபட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் 800 மீட்டர் உயரத்தில் உள்ள, சன்னாசி மலைக்கு சென்று, 48 நாள் தொடர் விரதம் இருந்துள்ளார் ராமசாமி.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்