வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்கப்படுவார்கள் – மத்திய அரசு

திங்கள், 4 மே 2020 (19:05 IST)
சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது.இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னமே வெளிநாடுகளில் இருந்து மக்கள் இந்தியாவுக்கு திரும்பிய நிலையில், இன்னும் பலர் வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பதாகவும் அவர்களை மீட்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது:

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7ம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  வெளிநாடுகளில் உள்ளவர்களை கடற்படை கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டில் உள்ள மக்களை கட்டண அடிப்படையில் இந்தியாவுக்கு  அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , அவர்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே இங்கே வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்