அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

வெள்ளி, 19 மே 2023 (10:54 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கு மே 9ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று கடைசி நாள் என்றும் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு http://tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்