பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர் ரவி.! பதவி விலக வேண்டும்..! செல்வப்பெருந்தகை...

Senthil Velan

வியாழன், 21 மார்ச் 2024 (18:03 IST)
பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
 
திமுக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே உச்சகட்ட மோதல் நீடித்து வருகிறது. தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் பொன்முடி பதவி பிரமாணம் செய்யும் விவகாரத்திலும் ஆளுநரின் செயல்பாட்டிற்கு உச்சநீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது
 
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையிலும் செயல்படுகிற பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்..! திருச்சியில் ஏற்பாடுகள் தீவிரம்..!
 
இதனை பா.ஜ.க. அரசு செயல்படுத்தவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்