பொன்முடியை அமைச்சராக்க முடியாது.. தமிழக முதல்வருக்கு ஆளுனர் ரவி பதில் கடிதம்?

Siva

திங்கள், 18 மார்ச் 2024 (07:23 IST)
பொன்முடியை மீண்டும் அமைச்சராக வேண்டும் என முதல்வர் தரப்பிலிருந்து ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஆளுநர் பதில் கடிதம் எழுதி இருப்பதாகவும் பொன்முடியை அமைச்சராக்க முடியாது என்று அந்த பதில் கடிதத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு கால சிறை தண்டனை பெற்ற நிலையில் இந்த வழக்கில் பொன்முடி தரப்பிலிருந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு வழக்கில் பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்எல்ஏ பதவி மீண்டும் திரும்ப பெற்றதாகவும் இதனை அடுத்து அவர் மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் பொன்முடிக்கு அமைச்சர் பதவி செய்து வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியதாகவும் ஆனால் திடீரென ஆளுநர் டெல்லி சென்று விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க முடியாது என்று ஆளுநர் தரப்பிலிருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொத்துக் குறிப்பு வழக்கில் பொன்முடி பெற்ற சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் நிரபராதி என தெரிவிக்கப்படவில்லை என்றும் ஆகவே அவரை அமைச்சர் ஆக்குவது சரியாக இருக்காது என்றும் அந்த கடிதத்தில் ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்