ஒரு வாரத்தில் தீர்ப்பு; சசி.யை காத்திருக்க வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது: ஆப்பு வைக்குமா மத்திய அரசு!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (11:35 IST)
தமிழக முதல்வராக சசிகலாவை தேர்ந்தெடுப்பதாக நேற்று கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் ஓரிரு நாட்களில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டது.


 
 
இந்நிலையில் அவரது முதல்வர் பதவியேற்புக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு வாரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த ஒரு வார இடைவெளியில் சசிகலா முதல்வராக பதவியேற்பாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
 
அடுத்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக முடிந்து அவர் சிறை செல்ல நேர்ந்தால் மீண்டும் தனது பதவியை அவர் இழக்க நேரிடும் என்பதால் சசிகலா முதல்வராக பதவியேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் ஆளுநர் சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது தற்போது. இதனையடுத்து சசிகலாவை ஆளுநர் ஒரு வாரம் காத்திருக்க சொல்ல சட்டத்தில் வழி உள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனை பயன்படுத்தி சசிகலாவை ஒரு வாரம் காத்திருக்க வைக்க ஆளுநர் கூறலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு வாரத்தில் தீர்ப்பு வந்ததும் அதில் சசிகலாவின் எதிர்காலம் தெளிவாக தெரிந்துவிடும், அதன் பின்னர் யார் முதல்வர் என்பதை தீர்மானிக்காலாம் என டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்