முதல்வருக்காக 2 மணி நேரம் காத்திருந்த ஆளுனர்.. கிறிஸ்துமஸ் விழாவில் பரபரப்பு!

சனி, 24 டிசம்பர் 2022 (16:03 IST)
இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் சுமார் நேரம் 2 மணி நேரம் காத்து இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முதலிலேயே வந்துவிட்ட பிறகு அவர் வந்த பிறகு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தான் முதல்வர் ரங்கசாமி இந்த விழாவுக்கு வந்தார்
 
இதனால் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் டென்ஷனாக தெரிகிறது. மேலும் நிகழ்ச்சி தொடங்கும் போது தேசிய கீதம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் போட வேண்டும் என கூறி கேக் வெட்டப்பட்டதும் அவசர அவசரமாக முதல்வர் ரங்கசாமி புறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
பாஜக கூட்டணி ஆட்சி தற்போது புதுவையில் நடந்து வரும் நிலையில் முதல்வர் மற்றும் ஆளுநர் மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்