அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி! – தமிழக அரசின் புதிய திட்டம்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (11:14 IST)
தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட் சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிக்கல்வி மற்றும் நூலக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

பள்ளிக்கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவிகளுக்கு புதிய நிதியுதவி திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து பின்னர் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாணவிகள் வேறு சில பிரிவுகளின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் கூட இந்த உதவித்தொகையை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்