பெற்றார். ஆனால் நீட் தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவி கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தற்கொலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்றது. இந்நிலையில் தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்குவதாக கூறியது. ஆனால் அனிதாவின் குடும்பத்தினர் நஷ்டஈடு தொகையை வாங்க மறுத்தனர். இந்நிலையில் இன்று அனிதாவின் சகோதரர் சதிஷ்குமாருக்கு தமிழக சுகாதார துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரிடம் பணி ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.